இந்தியன் வங்கியின் சார்பில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிகழ்வு
நிகழ்ச்சியில் பள்ளி மாணவிக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்தியன் வங்கி சார்பில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிகழ்ச்சி.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் கிராமத்தில் இந்தியன் வங்கியின் சார்பில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சாந்தி லால் ஜெயின், கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சமூக பங்களிப்பு நிதியின் கீழ் திருக்கண்டலம் கிராமத்தை உள்கட்ட அமைப்புகளை மேம்படுத்துவதற்கான நிதிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டும்.
பள்ளி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 200 மாணவர்களுக்கு பரிசுகளும் நோட்டு புத்தகத்துடன் கூடிய பள்ளி (school bag) மற்றும் கிராம நூலகத்திற்கு ரூபாய் 20000 மதிப்பான புத்தகங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் பேசியபோது, இந்தியன் வங்கியானது இந்திய அளவில் ஏழாவது பெரிய வங்கியாக விளங்கி வருவதாகவும் ரூபாய் 11.64 லட்சம் கோடியில் வர்த்தகம் செயல்பட்டு வருகிறது. மேலும் வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தில் வருகிற 2030.ஆம் ஆண்டில் ஏழு மில்லியன் டாலர் பொருளாதாரத்தை முன்னோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நம் பொருளாதாரம் இரண்டு மடங்கு வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது அதில் முக்கியமாக கிராமங்களில் மக்களின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதற்கு இந்தியன் வங்கி உறுதுணையாக உள்ளது. மகாத்மா காந்தி குறிப்பிட்டதை போல் நாட்டின் வளர்ச்சி கிராமங்களில் உள்ளதை இந்தியன் வங்கி கருத்தில் கொண்டு கிராமங்களில் முன்னேற்றம் அடைய செய்ய இந்தியன் வங்கி இந்த திருக்கண்டலம் கிராமத்தை தத்தெடுத்து அதற்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார்.
மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20 லட்சம் வரை பிணை இல்லாத கடன்களையும் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது வீட்டுக் கடன், தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களையும் வங்கி வழங்கி வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இறுதியாக அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் இம்ரான் ஆமீன் சித்திக், மகேஷ் குமார் பஜாஜ், அசுதோஷ் சவுத்ரி, பஜ்ரங் சிங் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் மதன் சத்யராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu