கும்மிடிப்பூண்டியில் பனை விதை வங்கி செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்

கும்மிடிப்பூண்டியில் பனை விதை வங்கி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பனை விதை வங்கி செயல்பாடுகள் தொடர்பாக கும்மிடிப்பூண்டியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் பனை விதை சேகரித்து பனை விதை வங்கி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.பனை விதைகளின் பயன்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி துறையினருக்கு அறிவுறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் அது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.முதல் நாளான இன்று கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட பனை விதை வங்கி ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பனை விதை வங்கியின் செயல்பாடுகள், செயல்படுத்தும் விதம், பயன்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி செயலாளர்கள், மக்கள் நல பணியாளர்கள் கலந்து கொண்டனர்.14 ஒன்றியங்களிலும் நாள்தோறும் அந்தந்த ஊராட்சி செயலாளர்கள், மக்கள் நல பணியாளகளுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது.இதனால் பனை விதையின் சிறப்பு பயன்பாடுகள், இதனால் பெறும் வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பனை மரங்களின் அடி முதல் முடி வரை பயன்கள் நிறைந்தது, பனையில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு மற்றும் பனம்பழம் ஆகியவை இயற்கை சத்துக்கள் நிறைந்ததாகும். மேலும் பனை மரங்கள் புயலை கூட தாங்கும் சக்தி வாய்ந்தவை என்பதால் அதனை நடுவதற்கு தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu