கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
X

கும்மிடிப்பூண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் அனைத்து கட்சியினருக்கும் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் தனித்துணை ஆட்சியருமான வி.கணேஷ் பங்கேற்று நாடாளுமன்றத் தேர்தலில் அதிகாரிகளின் பணிகள் குறித்து விளக்கினார்.

நிகழ்வில் வட்டாட்சியர்கள் கும்மிடிப்பூண்டி பிரீத்தி, ஊத்துக்கோட்டை மதன், கும்மிடிப்பூண்டி தேர்தல் பணி துணை வட்டாட்சியர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, பாஜக, பகுஜன் சமாஜ் கட்சியினர் பங்கேற்ற அனைத்துக் கட்சியினர் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், தேர்தல் பிரச்சாரத்தில் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், வழிபாட்டுத் தலங்கள் அருகே ஒலிப்பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யவோ, வழிபாட்டு தலங்களுக்குள் சென்று வாக்கு சேகரிக்க கூடாது என்றும் சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். இதில் அதிமுக கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
வீட்டுக்குள்ள இப்படி நடந்தாலே எடை குறைஞ்சு ஹெல்தியா இருப்பீங்களாமே.. அப்படி என்னதான் பண்ணனும் பாக்கலாமா...?