திருத்தணியில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

திருத்தணியில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து  ஆலோசனைக் கூட்டம்
X

முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம்

திருத்தணிக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்டங்கள் கடன்கள் வழங்குவதற்காக வரும் 14ம் தேதி திருத்தணிக்கு வரவிருக்கிறார்..

முதலமைச்சருக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜன் தலைமையில் பெருவாயில் திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகரம்,பேரூர்,ஒன்றிய, திமுக சார்பில் சுமார் 4000 தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாகவும் மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு இடையூறாக ஒரே நேரத்தில் அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டாமென்றும், முன்கூட்டியே வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்ய நிர்வாகிகளுக்கு மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜன் அறிவுறுத்தினார்

நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கீ.வேணு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி எச் சேகர் பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் பி.ஜெ.மூர்த்தி,ரமேஷ் ராஜ் கி.வே. ஆனந்தகுமார், செல்வசேகரன், மணிபாலன், சக்திவேலு மற்றும் ஒன்றிய பேரூர் என தி.மு.கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ai in future agriculture