காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பிரச்சாரம்

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பிரச்சாரம்
X
திருவள்ளூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் 2014,2019 என 10 ஆண்டுகளாக கூறிய வாக்குறுதி ஏதையேனும் மோடி நிறைவேற்றனாரா கேள்வி எழுப்பினார். 2கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என கூறிய நிலையில் இருந்த வேலை வாய்ப்புகளும் பறிபோயுள்ளன என குற்றம் சாட்டினார்.

இந்துத்வா என கூறி நாட்டை பிளவுபடுத்தும் கட்சி பாஜக என்றார். 15 லட்சம் பணம் தருவதாக கூறிய நிலையில் இறுதியில் ஜூம்லா என கூறுகின்றனர் எனவும், பணமதிப்பிழப்பில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். வரலாறு காணாத மழை வெள்ளத்தின் போதும் தமிழ்நாட்டு மக்களை சந்திக்க மோடி வரவில்லை எனவும், நிதியுதவியும் கொடுக்கவில்லை எனவும் எந்த முகத்தை வைத்து இங்கு வாக்கு கேட்டு வருகிறீர்கள் என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.

நல்ல வாயன் சம்பாதித்தை நார வாயன் அழிக்கிறான் என கிராமங்களில் கூறுவது போல, காங்கிரஸ் கட்சி சம்பாதித்த சொத்துக்களை பாஜக சாப்பிடுகிறது என குற்றம் சாட்டினர், மேலும் குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கும் மோடி, தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காதது ஏன் என்றும், இந்தியாவிற்கு விடியல் ஏற்பட வேண்டும் என்றும், அதற்கு பாசிச ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும் செல்வப்பெருந்தகை கூறினார். மேலும் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை கூறுகையில்

எதற்காக அகில இந்திய கட்சியினுடைய வங்கி கணக்கை முடக்கினார்கள் என கண்டித்திருப்பதாகவும், தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு எதற்காக டெல்லி முதலமைச்சரை கைது செய்திருக்கிறீர்கள் எனவும் கண்டித்திருப்பதையும், ஏற்கனவே நீதிமன்றம் கண்டித்த நிலையில் தற்போது ஐநா சபையும் கண்டித்துள்ளது மோடியின் வீழ்ச்சிக்கும்,அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உலகநாடுகளில் இருந்து குரல் எழுப்பப்படுகிறது எனவும், இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார். 400தொகுகளுக்கு மேல் தோல்வியடைய போவதை மோடி மாற்றி சொல்லி வருவதாகவும், இந்தியா கூட்டணி 400இடங்களுக்கு மேல் வெற்றி பெற போவதாகவும் கூறினார்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தல் பத்திர விவரங்களை பொது இடங்களில் வெளியிட மறுத்தது ஏன் எனவும், அடுத்ததாக பிஎம் கேர்ஸ் நிதி தொடர்பாக அடுத்து வரவுள்ளதாக கூறினார். உச்சநீதிமன்றமும், ஐநா சபையும் கண்டிக்கின்ற என்றால் பாஜகவின் பாசிச ஆட்சியை மக்கள் புரிந்து வைத்துள்ளதாக கூறினார்.

முன்னதாக பிரச்சார கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சசிகாந்த் செந்தில் சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் 4வழிப்பாதையாக மாற்றிட வேண்டும், மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றிட துணையாக இருப்பேன் என உறுதியளித்தார்.

நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன்,மாவட்ட தலைவரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நீலமேகம், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த மற்றும் காங்கிரசைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!