கும்மிடிப்பூண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்

தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக அரசை கண்டித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சரண்யா நகர் பகுதியில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்கள் காத்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், ரூபாய் 21.ஆயிரம் கோடி பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்கிட வலியுறுத்தியும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசின் செயலை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவா, பிரகாஷ், ரவி, முனிரத்தினம், மற்றும் சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் அருள், மாவட்ட குழு உறுப்பினர் பாலன், புகைழ், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சம்பூர்ணம் அம்மாள், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் பார்த்திபன், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜீவ் காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் கொடிகளை ஏந்தி விடுபட்ட நபர்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையை வழங்க கோரியும் தமிழகத்தில் பாஜக ஆட்சி மிக மோசமாக நடப்பதையும் கண்டித்தும் கோஷங்களை எழுப்பியவாறு கட்டண ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட குழு உறுப்பினர் செல்வம் விவசாய சங்கம் மாவட்ட துணைச் செயலாளர் செங்கல்ராயன், விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!