பெரிய ஒபுளாபுரம் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

பெரிய ஒபுளாபுரம் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
X
பெரிய ஒபுளாபுரம் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை, திருவள்ளூர் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரிய ஒபுளாபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள தூரப்பள்ளம் பகுதி , வீராசாமி நகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதனை அடுத்து புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தரக்கோரி ஊராட்சி மன்றத் தலைவர் செவ்வந்திமனோஜ்யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ், ரூ 8.50 லட்சத்தில் புதிய வசதிகளுடன் கூடிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்தார். இப்பணிகளை, நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் வந்து ஆய்வுசெய்தார். இப்பணிகளுக்காக, ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜை கலெக்டர் பாராட்டினார்.

இந்த நிகழ்வின்போது, கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஆணையாளர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அதிகாரி நடராஜன் பொறியாளர் மணிமேகலை, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செந்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் பெரிய ஒபுளாபுரம் ஊராட்சி சார்பாக ஊராட்சிமன்றத் தலைவர் செவ்வந்தி மனோஜ், துணைத் தலைவர் இன்பவள்ளி கஜேந்திரன், ஊராட்சி செயலாளர் வேதநாராயணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மோகனபிரியா யுவராஜ், ஜெயலட்சுமி சம்பத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story