முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை
X

பெரியபாளையத்தில்எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

CM Birthday Celebration பெரியபாளையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை சட்டமன்ற உறுப்பினர் டி. ஜெ. கோவிந்தராஜன் வழங்கினார்.

CM Birthday Celebration

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரும்,திமுகவின் தலைவருமான ஸ்டாலின் அவர்களின் 71-வது பிறந்த நாளையொட்டி பெரியபாளையத்தில் ஆட்டோ டிரைவர்கள் 100 பேருக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும்,எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான மூர்த்தி தலைமை தாங்கினார்.பொதுக்குழு உறுப்பினர் .ராமமூர்த்தி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ரவிக்குமார்,ஒன்றிய அவை தலைவர் ரவிச்சந்திரன், பூண்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்,சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கோவிந்தராஜன் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகளை வழங்கி பேசினார்.இந்நிகழ்ச்சியில், ஏனம்பாக்கம் சம்பத்,தொம்பரம்பேடு சங்கர், வடமதுரை அப்புன், பார்த்திபன்,தாராட்சி கார்த்திகேயன்,காதர்வேடு சம்பத்,பெரியபாளையம் புல்லட் ராஜா,ரியல் எஸ்டேட் ஏழுமலை,கௌதம், பனப்பாக்கம் ஞானசேகர்,ஆத்துப்பாக்கம் வேலு உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய, நகர,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்..

Tags

Next Story
ai based agriculture in india