பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

பெரியபாளையம் அருகே 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நீராவி மூலம் பல்வேறு வகையான செயற்கை கற்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கு 145 தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற் சங்கத்துடன் இணைந்து தொழிற்சாலை வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை சுரண்டி தனியார் நிர்வாகம் வேலை வாங்குவதாகவும் உரிய ஊதியம் வழங்கவில்லை என குற்றம் சாட்டினர்.
செங்கல் சூளை என பதிவு செய்துவிட்டு குறைந்த ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்குவதாகவும் புகார் தெரிவித்த தொழிற்சங்கத்தினர், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டுமென வலியுறுத்தினர். தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் லிங்கேஸ்வரன் தலைமை வகித்தார் சங்கத்தில் செயலாளர் சசிகுமார், பொருளாளர் முருகேசன், நிர்வாகிகள் சிவா, ஏழுமலை,சீனிவாசன், கோவிந்தராஜ், ரமேஷ் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் சிஐடியின் மாநிலத் துணைத் தலைவர் விஜயன், மாவட்டத் துணைத் தலைவர் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu