கும்மிடிப்பூண்டியில் கிறிஸ்துமஸ் ஊர்வலம்
கிறித்துமஸ் விழா
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளை 25.ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது
மேலும் இரவு நேரங்களில் சிறுவர்கள், பெரியவர்கள் சாண்டா வேடமடைந்து வீடு,வீடாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களுக்கு பரிசுகளை, இனிப்புகளை வழங்கி பிரார்த்தனை செய்தும் கொண்டாடி வருகின்றனர்
திருவள்ளூர் மாவட்டம். கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனி திறப்பின் சுவிஷேச சபை உள்ளது. இந்த திருச்சபையின் கிறிஸ்மஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பாஸ்டரும் வழக்கறிஞருமான எம்.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். நிகழ்விற்கு போவாஸ், ஜசக், சகரியா, ஜெயசீலன், ஏலேசியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து மேட்டுகாலனி, நங்கப்பள்ளம் ஆகிய பகுதிகளில் சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்தும், பாடல்கள் பாடியும், மாட்டு வண்டியில் இயேசு பிறப்பை வடிவமைத்து மேட்டு காலனியில் இருந்து கும்மிடிப்பூண்டி பஜார், கோட்டக்கரை, ரெட்டம்பேடு, சாலை வழியாக சென்று ஆடல் பாடல் வலம் வந்தனர்.
அப்போது பஜார் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகளும் குழந்தைகளுக்கு பென்சில் வழங்கியும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறினார். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu