கும்மிடிப்பூண்டியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஊர்வலம்
கும்மிடிப்பூண்டியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஊர்வலம் நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கும்மிடிப்பூண்டியில் ஊர்வலம் நடைபெற்றது.
உலகம் முழுவதும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ ஆலயங்களில் முந்தைய நாள் இரவு ஆராதனை மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது. முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களில் இரவு ஆராதனையும், மறு நாள் கிறிஸ்துமஸ் தினத்தன்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கும்மிடிப்பூண்டி மேட்டு காலனி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள திறப்பின் சுவிசேஷ சபை உள்ளது. இந்த சபையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டுஅதிகாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்ற பின்னர் சபைக்கு வந்திருந்த பொது மக்களுக்கு கேக் வெட்டி இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் தின ஊர்வலம் பாஸ்டர் எம்.புருஷோத்தமன் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடங்களை அணிந்து வாகனத்தில் பேனர்களை கையில் ஏந்தி கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் ரெட்டம் பேடு வரை சென்று பின்னர் சபை திரும்பி வந்தடைந்தது. இதில் சபை மூப்பர்கள் போவாஸ், ஜசாக், சகரியா, ஜெயசீலன், ௭லேசியர், சாமுவேல் மற்றும் விசுவாசிகள், நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu