கும்மிடிப்பூண்டியில் விவசாயிகளுடன் முதல்வர் கலந்துரையாடல்

கும்மிடிப்பூண்டியில் விவசாயிகளுடன் முதல்வர் கலந்துரையாடல்
X

கும்மிடிப்பூண்டியில் விவசாயிகளுடன் முதல்வர் காணொளி கட்சி முலம் கலந்துரையாடல் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் விவசாயிகளுடன் முதல்வர் காணொளி கட்சி முலம் கலந்துரையாடல் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மின்இணைப்பு பெற்ற ஒரு லட்சம் விவசாயிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று கலந்துரையாடல் நடத்தினார்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டத்திற்கு உட்பட் ட பகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆரணி, மீஞ்சூர், ஆரம்பாக்கம், பூவலம்பேடு உள்ளிட்ட பல் வேறு பகுதிகளை சேர்ந்த இலவச மின்சாரம் பெற்ற 253, விவசாயிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் காணொளி கட்சி முலம் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியானது திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியிலுள்ள டி.ஜெ. எஸ்.பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.ஜெ.எஸ்.கல்லூரி ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.

இதில் மின்சாரதுறை டிவிஷனல் பொறியாளர், செயற்பொறியாளர், உதவிபொறியாளர் மற்றும் மின் துறை அதிகாரிகள் திமுகவை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர பிற அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil