செங்கரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

செங்கரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
X

செங்கரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி செங்கரையில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், செங்கரை ஊராட்சி திமுக சார்பில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு செங்கரை பஸ் நிறுத்தம் அருகே திமுக கல்வெட்டை திறந்து வைத்து கொடியை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரும்,தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜே.மூர்த்தி தலைமை வகித்து தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர், மாவட்ட பிரதிநிதி வி.பி.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்குமார் வரவேற்றார். முடிவில் சதீஷ் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!