சூரவரிகண்டிகையில் செங்கல் லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம்

சூரவரிகண்டிகையில் செங்கல் லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான லாரி.

கும்மிடிப்பூண்டி அருகே செங்கல் ஏற்றிச்சென்ற லாரி நடுரோட்டில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தனியாருக்கு சொந்தமான செங்கல் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு மாதர்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் சூரவரிகண்டிகை என்ற இடத்தில் சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் செங்கல் லாரியில் இருந்த மாத்தையா, போலையா, ஆஞ்சநேயாலு, அங்கையா மற்றும் ஓட்டுநரான கார்த்திக் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயத்துடன் அனைவரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சாலை குண்டும் குழியுமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!