ஊத்துக்கோட்டை அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை, பணம் கொள்ளை

ஊத்துக்கோட்டை அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை, பணம் கொள்ளை
X

காெள்ளை நடந்த வீடு.

ஊத்துக்கோட்டை அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை, பணம் கொள்ளை. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை.

ஊத்துக்கோட்டை அருகே அருகருகில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை, பணம் கொள்ளை. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் என்பவர் நேற்று மாலை வீட்டை பூட்டி கொண்டு தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து இன்று அதிகாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், 40ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதேபோல் முக்கரம்பாக்கம் பகுதியை சேர்ந்த உஷாராணி தமது மகளின் பிரசவத்திற்காக திருச்செந்தூருக்கு சென்றிருந்தார். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். அருகருகே உள்ள 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai marketing future