கும்மிடிப்பூண்டி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

கும்மிடிப்பூண்டி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
X

கும்மிடிப்பூண்டி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பத்தில் அரசு உதவி பெறும் புனித மாரியன் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்ச்சேரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை அடுத்து கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஆரம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் புனித மரியன்னை தொடக்கப் பள்ளியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார். பின்னர் மாணவர்களுடன் சமபதியில் அமர்ந்து உணவு அருந்தி மாணவர்களை மகிழ்ச்சி அடை செய்தார்.

அப்போது பள்ளி தலைமை ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று மாணவ,மாணவியருக்கு மேசையுடன் கூடிய நாற்காலி மற்றும் கலையரங்கம் அமைத்து தருவதாக எம் எல் ஏ கோவிந்தராஜன் வாக்குறுதி அளித்தார். நிகழ்வில் ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.எம். எஸ்.சிவக்குமார், ஒன்றிய செயலாளர் மணிபாலன், ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், அமிர்த மன்னன் ஆகியோருடன் ரமேஷ், ரவி, பாஸ்கர், மஸ்தான், ரவி, மாதர்பாக்கம் மனோகர், மீனவர் ஆறுமுகம், ஜெயச்சந்திரன், மெய்யழகன், ஹரி, நரேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பல கலந்து கொண்டனர்.ன்று தமிழகத்தில் உள்ள

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது