ஊத்துக்கோட்டை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

ஊத்துக்கோட்டை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
X

கொள்ளையடிக்கப்பட்ட வீடு.

ஊத்துக்கோட்டை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் பென்னாலூர்பேட்டை அடுத்த மேலக்கரமனூர் கிராமம் கம்மாளத்தெருவில் வசித்து வருபவர் மோகன் ( 61 ) விவசாயி. இவர் கடந்த 22ம் தேதி மாலை வீட்டிலிருந்து தனது சகோதரி மகளின் மகனுக்கு பெயர்சூட்டு விழாவிற்காக திருவள்ளூரில் உள்ள ஜெயநகர் பகுதிக்கு சென்றார். அன்று இரவு அங்கேயே தங்கினார்.

மறுநாள் 23ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் அங்கேயே தங்கி விட்டு நேற்று 24ம் தேதி காலை 10.மணிக்கு திருவள்ளூர் ஜெயா நகரில் இருந்து கிளம்பி அரசு பேருந்தில் வீட்டிற்கு 11.30 மணிக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டை திறக்க முற்பட்ட போது, ஏற்கனவே பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மோகன் பென்னலூர் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இத் தகவலின் பேரில் பென்னலூர் பேட்டை போலலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது விவசாயி மோகன் வீட்டின் பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகை , 500 கிராம் வெள்ளி , ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை திருடிச்சென்றது தெரிய வந்தது.

பின்னர் திருவள்ளூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!