பெரியபாளையம் பகுதியில் மேளம் கொட்டி போகி கொண்டாடிய சிறுவர்கள்

பெரியபாளையம் பகுதியில் மேளம் கொட்டி போகி கொண்டாடிய சிறுவர்கள்
X

மேளம் கொட்டி போகியை வரவேற்ற சிறுவர்கள். 

பெரியபாளையம் பகுதியில் , சிறுவர்கள் மேளம் கொட்டி போகியை கொண்டாடி வரவேற்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, ஆண்டு தோறும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகி பண்டிகையின் போது, பழைய வேண்டாதவற்றை தீயிட்டு எரித்துவிடுவர்.

அவ்வகையில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் விடியற்காலை கொட்டும் பனியில், மக்கள் தங்கள் வீட்டின் முன்பு பழையன கழிதலும் புதியன புகுதலும் விதமாக தங்கள் விட்டில் இருந்த பழைய பாய்கள், முறம், துடைப்பம், துணிமணி பழைய அட்டைகள் மற்றும் பழைய காகிதங்களை வீட்டின் முன் குவித்து தீ வைத்தனர்.

சுற்றுச்சூழலை பாதிக்கும் பிலாஸ்டிக், டயர் உள்ளிட்டவற்றை தவிர்த்து, பழைய பொருட்களை தீயிலிட்டனர். சிறுவர்கள் போகி பண்டிகை மற்றும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை வரவேற்கும் விதமாக, போகி மேளம் கொட்டி உற்சாகமாக போகி பண்டிகையை கொண்டாடினர்.

Tags

Next Story