கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றில் கூலி தொழிலாளி சடலமாக மீட்பு

கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றில் கூலி தொழிலாளி சடலமாக மீட்பு
X
ஆரணி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயிலில் ஆரணி ஆற்றில் ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயில் பகுதியைச் சேர்ந்தவர் பாலு( வயது 50) இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இவர் வீட்டை விட்டு சென்றவர். பின்னர் வீடு திரும்பவில்லை. எனவே இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைத்து இடங்களில் தேடியும் பாலு காணவில்லை என கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த தகவலின் பெயரில் போலீசார் பாலுவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பெருவாயில் அருகே உள்ள ஆரணி ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்ணீரில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவரப்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி அவரை பார்த்தபோது போது அது இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன பாலு என்று தெரிய வந்தது.

சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்து போன பாலுவை முன் விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்து உடலை ஆற்றில் வீசினார்களா? அல்லது குடும்பத் தகராறினால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் கவரப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இந்த வகை ஜூஸ் மட்டும் போதும்..! நுரையீரல பளிச்சுனு சுத்தம் செஞ்சிரும்..என்னேனு பாக்கலாமா?