அவசர நிலை பிரகடனம் செய்த நாளை கருப்பு தினமாக அனுசரித்த பாஜக வினர்
பாஜக சார்பில் கருப்பு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் கருப்பு தினத்தை அனுசரிக்கும் விதமாக கருத்தரங்கம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
நாடு முழுவதும் நேற்று பாஜக சார்பில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பெரியபாளையத்தில் பாஜக சார்பில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் கருத்தரங்கம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி எல்.கே.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில்,பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார்.இதன் பின்னர்,செய்தியாளர்களிடம் பேசிய அவர் சுதந்திர இந்தியாவில் நெருக்கடி நிலை என்ற பெயரில் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்தனர்.அண்ணல் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை மீறி கருத்து சுதந்திரம்,பேச்சு சுதந்திரம்,எழுத்து சுதந்திரம் எதுவுமே இல்லாமல் இருந்தோம்.இதனை நினைவு கூறும் வகையில் கருப்பு தினத்தை இன்று அனுசரித்து வருகிறோம்.எனவே,நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
அதிகார துஷ்பிரயோகம் செய்த இந்திரா காந்தி குறித்து பொது மக்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு அரிய வாய்ப்பாக இந்நாளை கருதுவோம்.1975-ல் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என நீதியரசர் கூறியதையடுத்து அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி கைது நடவடிக்கையில் ஈடுபட்டவர் இந்திரா காந்தி ஆவார்.அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அரசியலமைப்பை காப்பது போன்று காங்கிரஸ்காரர்கள் பாவனை செய்து வருகின்றனர்.
அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி இந்திரா காந்தி பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கலைத்திருக்கிறார்.ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி இதுவரையில் எந்த ஒரு மாநில ஆட்சியையும் கலைக்கவில்லை என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,பாஜக அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் அழிஞ்சுவாக்கம் எம்.பாஸ்கரன்,திருவள்ளூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜே.ரவி,ஜம்புலிங்கம்,மாவட்ட பொருளாளர் கே.ஜி.எம்.சுப்பிரமணி மற்றும் மாவட்ட,ஒன்றிய,கிளை நிர்வாகிகள்,அணி பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu