திருவள்ளூர் அருகே பா.ஜ.க. பிரமுகரின் கார் தீ வைத்து எரிப்பு

திருவள்ளூர் அருகே பா.ஜ.க. பிரமுகரின் கார் தீ வைத்து எரிப்பு
X
திருவள்ளூர் அருகே வீட்டு முன் நிறுத்தி இருந்த பா.ஜ.க. பிரமுகரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நரசிங்கபுரம் கிராமத்தை பகுதியில் வசித்து வருபவர் தியாகு (35). உணவகம் ஒன்று நடத்தி வருகிறார் இவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா மாவட்ட செயலாளராக உள்ளார்

இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது பணிகளை முடித்துவிட்டு, எளாவூரில் உள்ள தனது வீட்டுவாசலின் முன்பு காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு தியாகுவின் காரை ஒருசில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் காரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும், அந்த காருக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அந்த காரின் முன்பகுதி முற்றிலும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. காரின் பிற பகுதிகளிலும் தீ பரவியது. இதை கண்ட ஓடி வருவதில் இதனை கண்ட அக்கம் பக்கத்தில் ஓடி வந்தனர் அவர்கள் கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் இது குறித்து ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி காரில் பரவிய தீயை அணைத்தனர். இதில் அந்த காரின் முன்பகுதி எரிந்து சேதமானது. இப்புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து , தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!