பெரியபாளையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பெரியபாளையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

பெரிய பாளையத்தில் நடந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரியபாளையத்தில் நடைபெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

பெரியபாளையத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி,எல்லாபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பெரியபாளையம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. இதை முன்னிட்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு,எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பி.ஜே.மூர்த்தி தலைமை தாங்கி கட்சிக்கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பின்னர் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்,பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி,கலை இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் வி.பி.ரவிக்குமார்,இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன்,மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இரா.அப்புன்,ஐ.ராஜா, ஆத்துப்பாக்கம் வேலு, தொண்டர் அணி துணை அமைப்பாளர் வடமதுரை பார்த்திபன், தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி,முகமது மொய்தீன், ஆறுமுகம் மற்றும் மாவட்ட,ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்,துணை அமைப்பாளர்கள்,கிளைக் கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,கழக முன்னோடிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business