மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
X

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது. 

பெரியபாளையத்தில் மறைந்த முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரியபாளையத்தில் மறைந்த முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் தேமுதிக தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் 72 வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் இனிப்பு, மற்றும் நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வந்தனர். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் ஒன்றிய செயலாளர் சுகுமார் தலைமையில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே கட்சி கொடியை வைத்து ஏழை எளிய மக்களுக்கு இனிப்புடன் கூடிய அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


ஒன்றிய அவைத் தலைவர் சிவகுமார், துணைச் செயலாளர் மோகன், நாராயணமூர்த்தி,சரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவை தலைவர் பாபு ராவ், கலந்து கொண்டு கட்சிக் கொடி நீயே ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். தொடர்ந்து பொதுமக்கள்1000 பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கினார். இதில் ஆரணி நகர செயலாளர் ஜெகதீசன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் ராமசுப்பிரமணி, நகர செயலாளர் ஜெயவேல் ஆகியோர் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story
ai solutions for small business