ஊத்துக்கோட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஊத்துக்கோட்டையில்  அரசால் தடை செய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

பைல் படம்

Plastic Ban in Tamil Nadu - திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன

Plastic Ban in Tamil Nadu -திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சுமார் 400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதால் பேரூராட்சி சார்பில் பலமுறை எச்சரிக்கை விடப்பட்டு வந்த நிலையில், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு பயன் படுத்துபவர்கள் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த உத்தரவின் பேரில், ஊத்துக்கோட்டை பேரூராட்சி பொறுப்பு செயல் அலுவலர் கலாதரன் மேற்பார்வையில், கும்மிடிப்பூண்டி தூய்மை மேற்பார்வையாளர் குமார் தலைமையில், ஊத்துக்கோட்டை தூய்மை மேற்பார்வையாளர் செலபதி மற்றும் ஊழியர்கள் இணைந்து நேற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியது தெரியவந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட கடைகளில் 35 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.3600 அதிகாரிகள் வசூலித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story