வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் கேமராவில் தெரியவில்லை: வேட்பாளர்கள் வாக்குவாதம்
ஊத்துக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகள் சிசிடிவி கேமராவில் காணவில்லை என கூறி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாக்குப் பெட்டிகள் வைத்துள்ள பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.இதில் 12-வது வார்டில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்,
மீதமுள்ள 14 வார்டுகளுக்கு கடந்த 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, அதற்கான வாக்குபெட்டிகள் ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்பில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 8 வாக்குப்பெட்டிகள் மட்டுமே சிசிடிவி கேமராவில் தெளிவாக தெரிவதாகவும்,மீதமுள்ளவை தெரியவில்லை எனக்கூறி அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளியை முற்றுகையிட்டு தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி தலைமையிலான காவல் துறையினர், வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள் சரியாக பொருத்தப்படவில்லை எனவும், ஆனல் வாக்குப்பெட்டிகள் பத்திரமாக இருப்பதாகவும் கூறியதையடுத்து அங்கிருந்து வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது, எனினும் சில வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே அமர்ந்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu