பெரியபாளையத்தில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பெரியபாளையத்தில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
X

கொள்ளை முயற்சி நடந்த தனியார் ஏடிஎம்.

பெரியபாளையத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

பெரியபாளையத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் வங்கி ஊழியர்கள் பணம் நிரப்ப சென்ற போது இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவது தெரிய வந்தது.

இது தொடர்பாக தனியார் வங்கியின் மேலாளர் சுபாஷினி அளித்த புகாரின் பேரில் பெரியபாளையம் காவல்துறையினர் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஏடிஎம்மில் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகள் இருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!