ரசீது கேட்டு மது பிரியர் ஊழியர்களிடம் வாக்குவாதம்!
கும்மிடிப்பூண்டி அடுத்த வேர்க்காட்டில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில், வாங்கிய மது பாட்டிலுக்கு ரசீது கேட்ட மது பிரியரை டாஸ்மாக் ஊழியர் தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த வேர்க்காட்டில் அமைந்துள்ள 8741 எண் கொண்ட அரசு டாஸ்மார்க் மதுபான கடையில் மது பிரியர் ஒருவர் மது பாட்டில் வாங்கிவிட்டு அதற்கான ரசீது வழங்குமாறு டாஸ்மார்க் ஊழியர்களிடம் கேட்கிறார். அதற்கு மது பிரியரை டாஸ்மார்க் மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் விற்பனையாளர்கள் சேகர், ராஜேஷ் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
அவ்வாறு பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த மதுபான கடையில் 10, முதல் 30 ரூபாய் வரை மது பாட்டில்களுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு டாஸ்மார்க் ஊழியர்களால் விற்பனை செய்யப்படுவதாகவும், மதுபான கடையையொட்டி இரண்டு கடைகள் அமைத்து தனி நபர் ஒருவர் சட்ட விரோதமாக தண்ணீர் பாட்டில்கள், சைடிஷ், வாட்டர் கிளாஸ் மற்றும் மது பாட்டில் உள்ளிட்டவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், தற்போது இந்த வீடியோவால், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் வைரலாகி பேசுபொருள் ஆகி வருகிறது.
இது போன்ற சட்டவிரோத செயல்களை கும்மிடிப்பூண்டி சரக காவல்துறையினர் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மது பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu