அரியப்பாக்கம் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
பெரியபாளையம் அருகே அரியப்பாக்கம் கிராமத்தில் 100. ஆண்டுகள் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே அரியப்பாக்கம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை கிராம மக்கள் பங்களிப்புடன் சீரமைத்து கும்பாபிஷேக விழா விமர்சையாக இன்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த 20.ஆம் தேதி பகவத் அனுக்ஞையானா எஜமான சங்கல்பம்,விஷவக்சேன ஆராதனம்,வாசு தேவதபுன்யாக வசனம், அங்குராப்பணம், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், கும்ப ஸ்தாபனம், இரண்டாம் காலையாக சாலை அக்னி ஆராதனை ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, இன்று சுப்ரபாதம் கோ பூஜை மூன்றாம் காலையாக சால ஆராதனை மூல மந்திர ஹோமங்கள், உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்த முடிந்தன.
பின்னர் காலை 9 மணி முதல் 10:30 மணி அளவில் புரோகிதர்கள் யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களைக் கொண்டு மேள தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வளம் வந்து ஆலயத்தின் மீதுள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதில் கலந்துகொண்ட திருடான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதனை அடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி வைத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. மாலை 6: மணி அளவில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது இன்று முதல் 48.நாட்களுக்கு மண்டல அபிஷேக விழா விமர்சையாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu