ஆரணியில் திமுக சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு: எம்எல்ஏ வழங்கல்

ஆரணியில் திமுக சார்பில்  பொங்கல் பரிசு தொகுப்பு: எம்எல்ஏ வழங்கல்
X

ஆரணி திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய எம்எல்ஏ கோவிந்தராஜன்.

மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்ற மக்களுக்கு ஆரணி திமுக சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை எம்எல்ஏ கோவிந்தராஜன் வழங்கினார்.

Arani Dmk Issued Pongal Gift

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஆரணி திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி எம்எல்ஏ கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது.

பெரியபாளையம் அருகே ஆரணி பகுதியில் நலிவுற்ற மக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கோவிந்தராஜன் வழங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், ஆரணி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ரோஸ் பொன்னையன் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு வேட்டி,சேலை, உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரணி பேரூர் செயலாளர் முத்து தலைமை தாங்கினார்.பேரூர் பொருளாளர் கரிகாலன் அனைவரையும் வரவேற்று பேசினார்.மாவட்ட நிர்வாகிகள் தண்டலம்,கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு மாவட்ட பொருளாளர் ரமேஷ், எம் எல் ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே.கோவிந்தராஜன் கலந்துகொண்டு 500.க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், நலிவுற்ற மக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு வேட்டி,சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலையரசி, கோபிநாத்,வார்டு கவுன்சிலர் ரகுமான்கான், நிலவழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products