ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு விழா: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ஏ ஆர் ரஹ்மான் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்.
AR Rahman News Today - பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கஜீதாவுக்கும், ரியாசுதீன் ஷேக் முகமது ஆகியோருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஐயர்கண்டிகை பகுதியில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான தோட்டத்தில் நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் உறவினர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர், நடிகைகள், திரைப் பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu