யோகாசனத்தில் கின்னஸ் சாதனை படைத்த கும்மிடிப்பூண்டி மாணவிக்கு பாராட்டு

யோகாசனத்தில் கின்னஸ் சாதனை படைத்த கும்மிடிப்பூண்டி மாணவிக்கு பாராட்டு
X

கூர்மாசனத்தில் மாணவி சஷ்டிகா.

Guinness World Records -யோகாசனத்தில் கின்னஸ் சாதனை படைத்த கும்மிடிப்பூண்டி மாணவிக்கு பாராட்டு

Guinness World Records -யோகாசனம் நமது உடலை நோய் நொடியின்றி வாழ்வதற்கும், இளமையாக இருப்பதற்கும் வழி வகை செய்கிறது. யோகாவிற்கு நமது இந்திய நாடு தான் குரு ஆகும். இந்தியாவில் தோன்றிய பதஞ்சலி முனிவர் உருவாக்கிய யோக கலை தான் இன்று உலகம் முழுவதும் யோகாசன நிபுணர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. யோகாசனத்தின் முக்கியத்துவத்தை அறிந்த பிரதமர் மோடி தான் பதவிக்கு வந்ததும் சர்வதேச யோகா தினத்தை அறிவித்தார். அதனை ஐ.நா.வும் ஏற்றுக்கொண்டு இன்று உலக நாடுகள் முழுவதும் ஜூன்மாதம் 23ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை நமது நாட்டின் கல்வி அமைப்பில் தற்போது யோகா முக்கிய பாடமாக இடம் பெற்று உள்ளது. பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு அதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்களை கொண்டு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. யோகா செய்வதற்கு வயதுவரம்பு கிடையாது. நடக்க படித்த குழந்தை முதல் தள்ளாடும் தாத்தா வரை யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி பெற்று உடல், மனம் இரண்டையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

யோகா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, கூர்மாசனம் எனும் யோகாசனத்தில் கின்னஸ் உலக சாதனை படைத்தார்.


கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரகதீஸ்வரன் - பிரியா தம்பதியரின் மகள் சஷ்டிகா, (வயது 18). பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவியான சஷ்டிகா கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஏழு ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வருகிறார்.

திருப்பூர் பகுதியை சேர்ந்த ஆர்த்தி (வயது25) என்ற இளம்பெண், கூர்மாசனம் எனும் யோகாசனத்தில், தொடர்ந்து ஒரு மணி நேரம் இரண்டு நிமிடம் இரண்டு வினாடிகள் நின்று கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார். இதுவே இதுவரை உலக சாதனையாக இருந்தது.

அவரது சாதனையை முறியடிக்கும் விதமாக, கும்மிடிப்பூண்டி மாணவி சஷ்டிகா, ஒரு மணி நேரம் ஆறு நிமிடம் ஒரு வினாடி, நின்று, கின்னஸ் உலக சாதனை படைத்தார்.


கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் ஏ.ஆர்.எஸ்., இரும்பு உருக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர், மாணவி சஷ்டிகா, சாதனை படைக்க நிதி உதவி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த மாணவி சஷ்டிகா, அவரது யோகா ஆசிரியர் சந்தியா, சாதனை படைக்க நிதி உதவி அளித்த தனியார் தொழிற்சாலையின் இயக்குனர் சத்யநாராயண மூர்த்தி ஆகியோரை கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.





அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்