பெரியபாளையம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் திமுக சார்பில் அன்னதானம்

பெரியபாளையம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் திமுக சார்பில் அன்னதானம்
X
பெரியபாளையம் அருகே ஆதரவற்றோருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் அன்னதானம் வழங்கினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெரியபாளையம் அருகே ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆதரவற்ற நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் பங்கேற்று கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் ஆதரவற்ற இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு கூடிய அறுசுவை அன்னதானத்தை வழங்கினார்.

இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்தியவேலு, தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் முனி வேல், நிர்வாகிகள் நீதி (எ) செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் ரவி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai as the future