மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
X
பெரிய பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்து உள்ள ஆவாஜிப்பேட்டை பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் முனுசாமி (43). இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணி செய்து வந்தார்.

இவர் இரவு வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, ஆவாஜிப்பேட்டை எம்.ஜி.ஆர். நகர் சாலை வளைவில், மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

இதனை பார்த்தவர்கள் முனுசாமியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு முனுசாமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும். சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பெரியபாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது