இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பனப்பாக்கம் கிராமத்தில் அம்மா பூங்கா சீரமைப்பு
82 பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்கா
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த 82 பனப்பாக்கம் கிராமத்தில் சுமார் 4000.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பனப்பாக்கம் ஊராட்சி ஏரி அருகே கடந்த2016-17 நிதியாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை திட்டத்தில் கீழ் ரூ. 10. லட்சம் மதிப்பீட்டில் அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்கா அமைக்கப்பட்டது.
இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களும். கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பெரியவர்களுக்கும் பயன்படும் வகையில் உடற்பயிற்சி செய்ய உடற்பயிற்சி கூடமும் அமைத்து தரப்பட்டது. இதனை பகுதி மக்கள் காலை மாலை என இரு வேலைகளிலும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணத்தினால் அருகாமையில் உள்ள பனப்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து அதில் உள்ள உபரி நீர் அருகே உள்ள பூங்காக்கள் பாய்ந்து குளம் போல் தேங்கி அம்மா பூங்கா உடற் பயிற்சி கூடம் சேறும் சகதியாக மாறியது. மேலும் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அடர்ந்த செடி கொடிகள் வளர்ந்து விஷ பூச்சி பாம்புகளுக்கு இருப்பிடமாக மாறியுள்ளது.
ஊராட்சி மெத்தன போக்கால் சரியான பராமரிக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இது குறித்து அப்பகுதி மக்கள் பூங்காவை மற்றும் உடற்பயிற்சி கூடத்தை சீர் செய்து தர வேண்டும் என்று பகுதி இளைஞர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் தற்போதாவது கண்டு கொண்டு பூங்காக்குள் உள்ள மழை நீரை வெளியேற்றி பூங்காக்கள் வளர்ந்துள்ள செடிக்குடிகளை அகற்றி சீர் செய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கிராம மக்கள் விடுத்த கோரிக்கை கடந்த 23ஆம் தேதி அன்று இன்ஸ்டாநியூஸ் செய்திதளத்தில் வெளியானது
இந்த செய்தியின் எதிரொலியாக பெரியபாளையம் அருகே 82.பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தில் மழைநீர் சேர்ந்து சேறும் சகதியாக இருந்ததை, தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் செய்யும் ஆட்களை வைத்து ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து வருகிறது இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து இன்ஸ்டாநியூஸ் செய்தி தளத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu