விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஊத்துக்கோட்டை,தண்டலம், பெரியபாளையம், சூளைமேனி, பாலவாக்கம். கண்ணிகைபேர் உள்ளிட்ட 6 இடங்களில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தளபதி அருள் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் அறிவுச்செல்வன் ஏற்பாட்டில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சூளைமேனி பகுதியில் பிரமாண்டமான மேடை அமைத்து அம்பேத்கர் படம் வைக்கப்பட்டது.படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்பு மற்றும் ஏழை பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தி.மு.க.வைச் சேர்ந்த எல்லாபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.ஜே.மூர்த்தி, ராமமூர்த்தி, ரவிக்குமார், லோகேஷ்,சுமன், மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் வித்யாலக்ஷ்மி வேதகிரி, சூளை மேனி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி காளிதாஸ், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்.தண்டலம் தமிழ்செல்வன்.கவிஞர்.ஜீவா, பிரசாந்த், கவியரசன், நவீன், நாகராஜ், தென்னரசு, முருகேஷ் வினோத் ராமமூர்த்தி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu