மகனுடன் பெண் கவுன்சிலர் கடத்தப்பட்டதாக புகார்; மாவட்ட போலீஸ் எஸ்.பி நேரில் விசாரணை

Woman Kidnapped Tamil Nadu- கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் இருந்த அதிமுக ஒன்றிய பெண் கவுன்சிலர், மகன் இருவர் காரில் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

மகனுடன் பெண் கவுன்சிலர் கடத்தப்பட்டதாக புகார்; மாவட்ட போலீஸ் எஸ்.பி நேரில் விசாரணை
X

கடத்தப்பட்டதாக கூறப்படும் கவுன்சிலர் ரோஜா, அவரது மகன் ஜேக்கப். ( கோப்பு படங்கள்)

Woman Kidnapped Tamil Nadu- கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் இருந்த அதிமுக ஒன்றிய பெண் கவுன்சிலர், மகன் இருவர் காரில் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை நடத்தினார். 3 தனிப்படைகள் அமைத்து, ஆந்திராவிற்கு தனிப்படையை அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக காவல் கண்காணிப்பாளர் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரமேஷ். இவர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளராக உள்ளார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் அரசு ஒப்பந்த பணிகள் மேற்கொண்டு வருகிறார்.

இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி ரோஜா, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 1வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களது மகன் ஜேக்கப் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களது உறவினர்கள் மாலையில் வீட்டிற்கு வந்த பார்த்த போது, வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டும் பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்து ரமேஷுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பெண் கவுன்சிலர் ரோஜா, மகன் ஜேக்கப் இருவரையும் மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவர்களது காரிலேயே கடத்திச் சென்றதாக பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செபாஸ் கல்யாண் தலைமையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டு, காட்சிகள் சேகரிக்கப்படும் ஹார்டு டிஸ்க்குகளை மர்ம நபர்கள் எடுத்து சென்றது தெரிய வந்தது. வீட்டில் இருந்து கடத்தப்பட்ட பெண் கவுன்சிலரின் செல்போன் எண் ஆந்திராவில் அணைக்கப்பட்டது தெரிய வந்தது.

பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட புகார் தொடர்பாக 3தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆந்திராவிற்கு தனிப்படை விரைந்துள்ளதாகவும், காவல் கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து பாதிரிவேடு போலீசார் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஒப்பந்த பணிகள் மேற்கொள்வதில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமா அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி, உட்கட்சி பூசல் ஏதேனும் காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த பெண் கவுன்சிலர், மகனுடன் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Jan 2023 8:54 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...