தாமரைபாக்கம் பகுதியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
![தாமரைபாக்கம் பகுதியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தாமரைபாக்கம் பகுதியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்](https://www.nativenews.in/h-upload/2021/09/02/1276677-img20210902203503.webp)
தாமரைபாக்கம் கூட்ரோடு பகுதியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் அரியானா மாநிலம் கர்நாடகாவில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். மனோகர் லால் கட்டர் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதில் பல விவசாயிகள் காயமடைந்தனர்.
இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய, தாக்குதலுக்கு காரணமான மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu