கும்மிடிப்பூண்டி: பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

கும்மிடிப்பூண்டி: பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி
X
கும்மிடிப்பூண்டி அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மூர்த்தி(45) இவருக்கு மனைவி 3 மகன்களும் உள்ள நிலையில் மூர்த்தி தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து மூர்த்தி வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.

அவரது மோட்டார் சைக்கிளில் எளாவூரில வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்