சென்னை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

சென்னை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி
X

நீரில் மூழ்கி இறந்தவரின் உடல் மீட்கப்பட்டது.

சென்னை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சென்னை மூலக்கடையைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் மகன் விக்னேஷ் வயது(18) சென்னையில் கார் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் தொளவெடு கிராமத்தில் தன் உறவினர் வீட்டுக்கு விக்னேஷ் 5.பேர் கொண்ட நண்பர்களுடன் வந்து இருந்தார்.

அப்போது கிராமம் அருகே உள்ள ஆரணி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற விக்னேஷ் ஆரணி ஆற்றில் நீர் தேங்கியிருந்த அதிக ஆழமான பகுதியில் சென்று குளித்தபோது திடீரென காணாமல் போனதால் இதனை கவனித்த நண்பர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் தேர்வாய் கண்டிகை சிப்காட் பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தேடிய பின்னர் விக்னேஷ் உடலை சடலமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!