கும்மிடிப்பூண்டி அருகே அரிய வகை மூலிகை செடிகளை பராமரித்து வரும் இளைஞர்

கும்மிடிப்பூண்டி அருகே அரிய வகை மூலிகை செடிகளை காப்பாற்றி வரும் இளைஞர்.
கும்மிடிப்பூண்டி அருகேஆமிதா நல்லூரில் மூலிகை செடிகளை பராமரித்து வரும் இளைஞர், அழிவின் விளிம்பில் இருக்கும் மூலிகைகளை காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட ஆமிதாநல்லூரில் வசிப்பவர் இளைஞரான என்.கார்த்திக்.டி.பார்மஷி படித்துள்ள இவருக்கு தாவரங்கள் மீதும் மூலிகைகள் மீதும் ஏற்பட்ட அதீத ஆர்வத்தின் காரணமாக சிறு வயது முதலே அறிய மூலிகை செடிகளை வளர்ப்பது, தோட்ட வேலைகளை செய்வது மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபடுவதென தன்னுடைய இளம் வயது முழுதையும் தாவரங்களுடனே செலவிட்டுள்ளார். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் மற்ற இளைஞர்களை போல் ஆடம்பர வாழ்க்கையை விரும்பாமல் இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில் மருந்து இல்லாத இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர்களை வளர்த்தல் மற்றும் செடிகளை வளர்க்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளார்.
அதன் பயனாக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மூலிகை ஆராய்ச்சிக்காக சென்று வந்து அங்கிருந்த மூலிகைகளை தனது வீட்டு தோட்டத்தில் பராமரித்து வருகிறார். அரிய மூலிகைகளை கண்டுபிடித்து அதனை வளர்த்து தன்னைப் போன்று தாவரங்களை வளர்க்கும் ஆர்வலர்களுக்கு வழங்கியும் வருகிறார். மேலும் அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த அரிய வகை மூலிகை செடிகளை மீட்டெடுத்து அதை அறியாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் இளைஞர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு இளைஞர்களும் இது போல் முடிந்த அளவிற்கு தங்கள் பகுதியில் உள்ள மூலிகை செடிகளை காப்பாற்றினால் நிச்சயமாக அழிவின் விளிம்பில் உள்ள மூலிகை செடிகளை நிச்சயம் காப்பாற்றலர் என்பது மூலிகை செடி ஆர்வர்களின் வேண்டுகோளாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu