கும்மிடிப்பூண்டி அருகே முட்புதரில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் உடல்

கும்மிடிப்பூண்டி அருகே முட்புதரில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் உடல்
X
மர்மமாக இறந்த வெங்கட்டம்மாள். அவர் இறந்து கிடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி அருகே ரத்த காயங்களுடன் முட்புதரில் மீடகப்பட்ட உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்மிடிப்பூண்டி அருகே முட்புதரில் உடலில் காயங்களுடன் பெண் சடலம் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த போந்தவாக்கம் வில்லியர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 42) - இவரது மனைவி வெங்கட்டம்மாள் ( வயது36) இத்தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.மேலும் அவர்களுக்கு இடையே தினந்தோறும் சிறு,சிறு பிரச்சனை காரணமாக தொடர்ந்து சண்டை சச்சரவுகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று குடும்ப பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் சீனிவாசன் வெங்கட்டம்மாவை கன்னத்தில் தாக்கியதாகவும், அப்போது வெங்கட்டம்மா மயக்கம் அடைந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் வெங்கட்டம்மாள் நேற்று மதியம் முட்புதர் ஒன்றில் இறந்த நிலையில் கிடப்பதாக பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதிரிவேடு போலீசார் வெங்கட்டம்மாவின் உடலை மீட்ட நிலையில் காது, கழுத்து, வயிறு உள்ளிட்ட பாகங்களில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதை உறுதி செய்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பாதிரிவேடு போலீசார் மோப்ப நாய்களை வரவழைத்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பெண் ஒருவர் முட்புதரில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!