தி.மு.க.இளைஞர் அணி சார்பில் இரண்டாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே நடந்த தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் டி.ஜே. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. பேசினார்.
கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் பாதிர்வேடு கிராமத்தில் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் பங்கேற்றார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், பாதிர்வேடு கிராமத்தில். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி. ஜே. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அனைவரையும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்திர மோகன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் மு. மணிபாலன், அவைத்தலைவர் ஜோதிலிங்கம், நிர்வாகிகள் உதய காந்தா அம்மாள், தலைமைச் பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், நிர்வாகிகள் வெங்கடாஜலபதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மாதர்பாக்கம் ஜே.மோகன் பாபு, கே.வி.லோகேஷ், ஆனந்தகுமார், வாசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. கொள்கை பரப்பு இணை செயலாளர் ஈரோடு இறைவன் கலந்து கொண்டு அரசின் இரண்டு ஆண்டு கால கட்டத்தில் நடைபெற்ற ஆட்சியின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, மூர்த்தி, மஸ்தான், பரத்குமார், இயேசு இரத்தினம், உள்ளிட்ட ஒன்றிய, பேரூர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவா இளங்கோ, மகேந்திரன், கருணாகரன் ஆகியோர் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu