கும்மிடிப்பூண்டியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது

Ration Shop | Ration News
X
Ration Shop- சென்னை கும்மிடிப்பூண்டியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Ration Shop- கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுண்ணாம்புக்குளம் அருகே பஜனைக் கோயில் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 38) இவர் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு ஆந்திராவிற்கு கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்து ரமேஷ் வீட்டில் சோதனை சோதனை நடத்தினர் அங்கு சுமார் ஒரு டன் எடை கொண்ட ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ரமேஷை தேடி வந்த நிலையில். கும்மிடிப்பூண்டி அருகே பதுங்கியிருந்த ரமேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்