பெரியபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

பெரியபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட தனியார் நிறுவன செக்யூரிட்டி.

பெரியபாளையம் அருகே அக்கரப்பாக்கம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்த தனியார் நிறுவன செக்யூரிட்டியை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள மதுவிலக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையில் நேற்று போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.

ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அக்கரப்பாக்கம் பகுதிக்கு சென்றனர்.அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் திரிந்து கொண்டிருந்த ரவாக்பாத்(வயது38) என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் ரவாக்பாத் அக்கரப்பாக்கம் கிராமம்,மேட்டு தெருவை சேர்ந்தவர் என்பதும், தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டி வேலை செய்து வருவதாக தெரிய வந்தது.

பின்னர்,அவரிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை செய்தனர். விசாரணையில் 340 கிராம் எடை கொண்ட கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ரவாக்பாத்தை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

பின்னர்,அவர் மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்டேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!