கும்மிடிப்பூண்டி அருகே செங்கல் சூளையில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி புது வாயிலில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு தற்காலிக கொட்டகைகள் செங்கல் சூளை சார்பில் அமைக்கப்பட்டு அதில் தங்குவார். இந்த நிலையில் இந்த செங்கல் சூளையில் தர்ஷன் என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை இவரது மகள் திவ்யாவை (வயது12). பாம்பு கடித்துள்ளது. அப்போது திவ்யா அலறியடித்து வலியால் துடித்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் எழுந்து பார்த்த போது விரலில் ஏதோ கடித்த அடையாளம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக சிறுமியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிறுமிக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து சிறுமி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu