மெட்ரோ ரயிலில் வேலை; ரூ.21 லட்சம் மோசடி செய்த போலி கல்வி அதிகாரி கைது

மெட்ரோ ரயிலில் வேலை; ரூ.21 லட்சம் மோசடி செய்த போலி கல்வி அதிகாரி கைது
X

கைது செய்யப்பட்ட போலி கல்வி அதிகாரி கிருபா.

சென்னை மெட்ரோ ரயிலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.21 லட்சம் மோசடி செய்த போலி கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பெண்ணாலுர் பேட்டையைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரிடம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கிருபா என்பவர், தான் கல்வித் துறையில் பெரிய அதிகாரியாக பணியாற்றி வருவதாக்கூறி, வேலை வாங்கித் தருவதாகவும் ரூ. 21லட்சம் வாங்கியுள்ளார்.

ஆனால், வேலையை வாங்கித் தராமல் ஏமாற்றியதால் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது தராமல் ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் சந்திரசேகர் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிருபா என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக மட்டுமே வேலை செய்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து போலி கல்வி அதிகாரியை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!