கும்மிடிப்பூண்டி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாடு உயிரிழப்பு

உயிரிழந்த மாட்டை அப்புறப்படுத்தும் முயற்சியில் விவசாயி.
கும்மிடிப்பூண்டி அருகே ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து மாடு ஒன்று உயிழந்தது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(வயது 39). இவருக்கு சொந்தமான கால்நடைகளை வளர்த்து வந்த நிலையில் இவர் அதிகாலை வழக்கம் போல் மாடுகளை அவிழ்த்துக் கொண்டு மேய்ச்சலுக்காக ஏனாதிமேல்பாக்கம் விவசாய நிலப்பகுதியில் கொண்டு சென்று மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக செல்லும் மின்கம்பி ஒன்று விளை நிலத்தில் அறுந்து கீழே விழுந்துள்ளது.இதில் அவ்வழியாக மாடு சென்றுள்ளது.இதனால் மாடு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடித்து துடித்து உயிரிழந்துள்ளது.இதுகுறித்து கோபி கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் மேற்கண்ட மாடு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் மற்றும் விளை நிலங்களில் அமைக்கப்பட்ட மின்கம்பங்களில் செல்லும் மின் கம்பிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவ்வப்போது இதுபோன்ற விபத்துக்கள் நடைபெற்று வருவதாகவும். கால்நடைகளும், 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தது உள்ளனர்.
இது சம்பந்தமாக பலமுறை மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கின்றனர், எனவே தற்போதாவது மின்வாரிய அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பிகள், பழுதடைந்த மின் கம்பங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக மாற்றி இதுபோன்ற உயிரிழப்புகள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை வேண்டும் என்றும் தற்போது மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்த மாட்டின் உரிமையாளருக்கு கூறிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu