நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலியாக குப்பை மேட்டில் அறிவிப்பு பலகை

நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலியாக குப்பை மேட்டில் அறிவிப்பு பலகை
X

குப்பைமேட்டில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.

நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலியாக ஏரியின் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலியாக ஏரியின் அருகே கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றி எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளது குமரப்பேட்டை ஊராட்சி மன்றம்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை ஊராட்சியில் 4000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சிக்குட்பட்ட அஞ்சாத்தம்மன் கோவில் பெரியபாளையம்- புதுவையில் சாலை அருகே சுமார் 5 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியை சுற்றி நூற்றுக்கணக்கான விளைநிலங்கள் உள்ளன. மேலும் அருகில் ஆரணி ஆறும் செல்கிறது.

மழைக்காலங்களில் விளை நிலங்களில் தேங்கி நிற்கும் மழை நீர் கால்வாய் மூலம் இந்த ஏரியில் வந்து சேரும். இந்த ஏரியின் அருகே ஊராட்சிக்கு சொந்தமான நான்கு ஆழ்துளை கிணறுகளை அமைக்கப்பட்டு இங்கிருந்து பைப்புகள் மூலம் கே.ஆர்.கண்டிகை, குமரப்பேட்டை ஊராட்சி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியில் தண்ணீரை கொண்டு சென்று அதில் இருந்து மேற்கொண்ட பகுதி மக்களுக்கு காலை, மாலை என இரு வேளைகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.


இதனையடுத்து இப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள், இறைச்சி கடைகளில் இருந்தும், சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கோழி இறைச்சிகள் உள்ளிட்டவை கொண்டு வந்து ஏரியின் அருகே இரவு நேரங்களில் கொட்டி செல்கின்றனர்.இதில் உணவு தேடி அங்கு சுற்றித் திரியும் பன்றிகள், நாய்கள்,மாடுகள் கிளறுவதால் அவை காற்றில் பறந்து அருகில் உள்ள ஏரியில் கலப்பதால் குடி தண்ணீர் மாசு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இந்த ஏரினை அருகே கொட்டப்படும் குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கப்பட்ட செய்தி. கடந்த மாதம் (16.05.2024) அன்று நேட்டிவ் நியூஸ் தமிழ் இணையதளத்தில் செய்தி வெளியானது.

இந்த செய்தி எதிரொலியின் காரணமாக குமரப்பேட்டை ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் குப்பைகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. மேலும் இப்பகுதியில் குப்பை கொட்டினால் தண்டிக்கப்படுவார் என எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!