பெரியபாளையம் அருகே பாம்பு கடித்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு

உயிரிழந்த சிறுவன்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த குமாரப்பேட்டை ஊராட்சி சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் ராஜகோபால் பிரேமா தம்பதியரின் மகன் சரண்குமார்(10) கவரப்பேட்டை அருகில் உள்ள புதுவாயில தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை சரண்குமார் வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விஷ பாம்பு ஒன்று சிறுவன் சரண்குமாரை கடித்தது. இதனை அறிந்த பெற்றோர்கள் சிறுவனை மீட்டு பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்குப்பட்டு சென்னையில் உள்ள குழந்தைகள் மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சரண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் குமரப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலர் தெரிவிக்கையில், இதே போல் ஐந்து மாதத்திற்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது விஷம் நிறைந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று கடித்ததில் அண்ணன் உயிரிழப்பு தம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதுபோன்று பாம்புகள் கடித்த போது அவற்றை விஷத்தை முறிக்க போதிய அளவில் பாம்பு கடி மருந்துகள் அனைத்து மருத்துவமனையில் இல்லை என்றும், முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தும் இதுபோன்ற உயிர் இழப்புகள் நடந்தேறி வருகிறது என்றும் அனைத்து மருத்துவமனையில் பாம்பு கடிக்கு தகுந்த சிகிச்சை அளித்து நேரத்தில் காப்பாற்ற வேண்டும் பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu