திருவள்ளூர் திருக்கண்டலம் கிராமத்தில் 7ம் ஆண்டு மாசிமக தெப்ப திருவிழா
மாசி மக விழாவில் சுவாமிகள் வீதி உலா நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் திருக்கள்ளில் என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இங்குள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவாநந்தீஸ்வரர் திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இக்கோவிலில் மாசி மக விழாவை முன்னிட்டு கடந்த 14.ஆம் தேதி சுந்தர விநாயகர் முருகன் வள்ளி தெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆன பால் தயிர்.சந்தனம்.உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அன்று திருவீதி உலா நடைபெற்றது 15.ஆம் தேதி மாலை சுக்கிர வள்ளி அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது நேற்று 16.ஆம் தேதி அன்று கோவில் வளாகத்தில் சிவபார்வதி களுக்கு வெகு விமர்சையாக திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மடவிளாகம் கிராமத்தில் இருந்து கிராம பொதுமக்கள் தாய் வீட்டு சீதனமாக கல்யாண சீர்வரிசை பொருட்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதன் பின்னர் சோமசுந்தரர் அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. கோவில் எதிரே உள்ள திருக்குளத்தில் உற்சவர்கள் தெப்பத்தில் வைக்கப்பட்டு உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றன இந்நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார 15.க்கு மேற்பட்ட கிராமத்திலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சத்திய வேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆலயத்தின் சார்பில் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இதன் பின்னர் அங்கு வந்திருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மதன் (ஏ) சத்யராஜ் அன்னதானம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.
இதனை சிறப்பு அழைப்பாளராக கலந்து கண்ட கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் நாராயணன்,குருக்கள் திருவரசன், தலைமையில் திருக்கண்டலம் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.திருக்கண்டலம் கிராமத்தில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத திருநந்தஸ்வரர் திருக்கவிலில் மாசி மாத தெப்பத் திருவிழா 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu